நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் மற்றும் தெலுங்கில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி கடந்த 2017ம் ஆண்டு ஆரம்பமானது. தமிழில் கடந்த ஐந்து சீசன்களாக கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கினார், ஆறாவது சீசனையும் அவரேதான் தொகுத்து வழங்கப் போகிறார்.
தெலுங்கில் முதல் சீசனை ஜுனியர் என்டிஆர், இரண்டாவது சீசனை நானி ஆகியோர் தொகுத்து வழங்கினர். கடந்த நான்கு சீசன்களாக நாகார்ஜுனாதான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த ஆண்டிற்கான ஆறாவது சீசன் செப்டம்பர் 4ம் தேதியன்று ஆரம்பமானது. மொத்தம் 20 பேர் போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளார்கள்.
முந்தைய சீசன்களைப் போலவே இந்த ஆறாவது சீசனுக்கும் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டிவி ரேட்டிங்கில் மிகக் குறைவான வரவேற்பே கிடைத்துள்ளது. முந்தைய ஐந்து சீசன்களில் ஆரம்பத்தில் சராசரியாக 16 டிவி ரேட்டிங் கிடைத்த நிலையில் இந்த ஆறாவது சீசனின் ஆரம்பத்திற்கு அதில் பாதியாக வெறும் 8 ரேட்டிங் மட்டுமே கிடைத்துள்ளதாம்.
தமிழிலும் கமல்ஹாசன் தொகுத்து வழங்க ஆறாவது சீசன் விரைவில் ஆரம்பமாக உள்ளது என அறிவித்துள்ளார்கள். தெலுங்கைப் போலவே தமிழிலும் இறங்கு முகம் இருக்குமா அல்லது முந்தைய சீசன்களைப் போலவே வரவேற்பு இருக்குமா என்பது நிகழ்ச்சி ஆரம்பமான பின் தெரிந்துவிடும்.