நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப்பச்சன், நாகார்ஜுனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த ஹிந்தித் திரைப்படம் 'பிரம்மாஸ்திரா'. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக வெளிவந்தது.
முதல் மூன்று நாட்களில் ரூ.250 கோடி வசூலைக் கடந்ததாக சொல்லப்பட்டது. சுமார் 400 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் 700 கோடி வசூலைக் கடந்தால்தான் லாபகரமான படமாக அமையும் என பாலிவுட்டில் தெரிவித்திருந்தார்கள். ஆனால், முதல் மூன்று நாள் வசூல் தவிர வார நாட்களில் இப்படத்தின் வசூல் வெகுவாகக் குறைந்துவிட்டது. கடந்த மூன்று நாட்களாக இந்தியாவில் 40 கோடிக்கும் குறைவாகவே வசூலித்துள்ளதாம்.
இதனால், படம் எதிர்பார்க்கப்பட்ட வசூலைப் பெற முடியாமல் போகும் என்றும் சொல்கிறார்கள். எனவே, படம் நஷ்டத்தை நோக்கி நகர்வதைத் தவிர்க்க முடியாது என்றும் தெரிவிக்கிறார்கள். ஓடிடி மற்றும் இதர உரிமைகள் மூலம் தயாரிப்பாளர் பணத்தைத் தேற்றலாம். ஆனால், தியேட்டர் உரிமைகளை வாங்கியவர்களுக்கு சோதனையாக இருக்கும் என்கிறார்கள்.