நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

அமைதிப்படை 2, கண்களும் கவி பாடுதே தற்போது உருவாகி வரும் பிஸ்தா, மணியார் குடும்பம் ஆகிய படங்களில் நடித்து வருபவர் மலையாள நடிகை மிருதுளா முரளி. தற்போது தெருநாய்கள் குறித்த பிரச்சனை சோசியல் மீடியாவில் பெரிய அளவில் பேசப்பட்டு வரும் நிலையில், அவற்றுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் மிருதுளா. சமீபத்தில் கேரள அரசு தெருவில் திரியும் வெறி பிடித்த நாய்களை கொல்வதற்கு அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருக்கும் செய்தி வெளியானது.
இதை கேள்விப்பட்டதும் கொந்தளித்துப்போன மிருதுளா முரளி, “பாலியல் பலாத்காரம், கொலை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் அனைவரையும் கொன்று விடுகிறோமா என்ன? அவர்களுக்கு ஜெயில் என்கிற ஒரு இடத்தை கொடுத்து பாதுகாக்க தானே செய்கிறோம். அதேபோன்று இந்த வாயில்லா பிராணிகளை எதற்காக கொல்ல வேண்டும்? அவைகளுக்கு என தனியாக ஒரு தங்குமிடத்தை ஒதுக்கி அவற்றை பராமரிப்பதை விட்டுவிட்டு, கொல்வதற்காக அனுமதி கேட்பது மனிதாபிமானமற்ற செயல்” என்று விமர்சித்துள்ளார். மிருதுளாவின் இந்த கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.