நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ்த் திரையுலகத்தின் நீண்ட நாளைய காதல் ஜோடிகளான நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்குப் பிறகும் சில வாரங்களுக்கு முன்பு அவர்கள் சென்ற வெளிநாட்டு சுற்றுப் பயண புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பதிவுகளைப் போடும் வழக்கத்தை உடைய விக்னேஷ் சிவன் முதல் முறையாக மருமகனாக தனது மாமியாருக்கு, அதாவது நயன்தாராவின் அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
“அன்புள்ள ஓமனா குரியன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். எனது மற்றொரு அம்மா. நான் மிகவும் நேசிக்கும் ஒரு பெண், எப்போதும் அழகான இதயத்துடன் தூய்மையான ஆன்மாவைப் பார்க்கிறேன். நல்ல ஆரோக்கியம், அமைதி, மகிழ்ச்சி, ஆசீர்வாதங்களுடன் இருக்க வேண்டுமென கடவுளைப் பிரார்த்திக்கிறேன்,” என வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார்.