மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
கவுதம் மேனன் இயக்கத்தில், விக்ரம், ரித்து வர்மா, சிம்ரன், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடிப்பில் 2017ல் ஆரம்பமான படம் 'துருவ நட்சத்திரம்'. படம் ஆரம்பமாகி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் வெளியாகாமலேயே பல்வேறு காரணங்களால் முடங்கிக் கிடக்கிறது.
கடந்த மாதம் இப்படம் குறித்து 'நட்சத்திரங்கள் சீரமைக்கப்படும்' என பதிவிட்டு அப்படத்தின் நாயகன் விக்ரம் உடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார் கவுதம். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் 'துருவ நட்சத்திரம்' படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
கவுதம் மேனன் இயக்கியுள்ள 'வெந்து தணிந்தது காடு' படம் நாளை(செப்.,15) வெளியாகிறது. இதற்கடுத்து கவுதம் மேனன் இயக்கி வெளிவரும் படமாக 'துருவ நட்சத்திரம்' படம் வெளிவர உள்ளது. அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள மற்றொரு படமான 'ஜோஷ்வா இமை போல் காக்க' படம் எப்போது வெளியாகும் என அப்டேட் எதுவும் இல்லை.
பேட்டியில் சொன்னபடி 'துருவ நட்சத்திரம்' படம் டிசம்பரில் வெளிவந்தால் அதுவே விக்ரம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்தான்.