நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பிக்பாஸ் வெற்றியாளரான ராஜூ பாய் நெட்டிசன்களிடம் சிக்கி படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார். அண்மையில் நடைபெற்ற பிக்பாஸ் ஜோடிகள் 2 கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ரன்பீர் கபூர், ராஜமவுலி, நாகர்ஜுனா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ராஜூ ஜெயமோகன் ரன்பீருக்கு தமிழ் கற்றுக் கொடுக்கிறேன் என்ற பெயரில் சென்னை, மதுரை, கோயும்புத்தூர் வட்டார மொழிகளை பேச கற்றுக் கொடுத்தார்.
அப்போது அவர் சென்னை வட்டார வழக்கு பற்றி பேசும் போது சென்னை மக்களை இழிவுப்படுத்தும் தோரணையில் இருந்ததாக குற்றசாட்டு எழுந்தது. இதனையடுத்து ராஜூவை சோஷியல் மீடியாவில் பலரும் திட்ட ஆரம்பித்தனர். பிரச்னையை புரிந்து கொண்ட ராஜூ 'நகைச்சுவைக்காக செய்தது தவறாக மாறியதற்காக வருந்துகிறேன். இரிடேட் ஆக வேண்டாம். மன்னிக்கவும்' என பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே, அந்த காணொளியில் சென்னை மக்கள் எப்போதும் இரிடேட்டடாக இருப்பார்கள் என்று சொல்லியதற்கு தான் பலரும் அவரை விமர்சித்தனர். இப்போது மீண்டும் இரிடேட் ஆக வேண்டாம் என ராஜூ சொல்லியிருப்பது விமர்சப்பிவர்களை கிண்டலடிக்கும் தொனியில் இருப்பதாக ராஜூவை மேலும் விமர்சித்து வருகின்றனர்.