நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

2022ம் ஆண்டுக்கான 'சைமா' விருதுகள் வழங்கும் விழா பெங்களூருவில் நடைபெற்றது. இதில் மாநாடு படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகர் சிம்புவுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வழங்கப்பட்டது. 'திட்டம் இரண்டு' படத்தில் நடித்ததற்காக அவருக்கு இவ்விருது கிடைத்தது. தலைவி படத்தில் நடித்தமைக்காக கங்கனாவிற்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.
பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' சிறந்த படத்துக்கான விருது பெற்றது. சார்பட்ட பரம்பரையில் நடித்த ஆர்யாவுக்கும் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது.
சிறந்த கதாநாயகனுக்கான விருது சிவகார்த்திகேயனுக்கு வழங்கப்பட்டது. டாக்டர் படத்திற்காக அவருக்கு இவ்விருது கிடைத்தது. அதே படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார் நடிகை பிரியங்கா மோகன். மேலும், டாக்டர் படத்தில் நடித்த ரெடின் கிங்ஸ்லி மற்றும் தீபா ஆகியோருக்கு சிறந்த காமெடி நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. யோகிபாபுவுக்கு முழு ஆண்டுக்குமான சிறந்த காமெடி நடிகர் விருது வழங்கப்பட்டது.
மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜுக்கு சிறந்த இயக்குனருக்கான விருது வழங்கப்பட்டது. சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருது மடோன் அஸ்வினுக்கு வழங்கப்பட்டது. யோகிபாபு நடிப்பில் வெளியான 'மண்டேலா' படத்தை இயக்கியதற்காக அவருக்கு இவ்விருது கிடைத்தது
நயன்தாரா நடித்த நெற்றிக்கண் படத்தில் "இதுவும் கடந்து போகும்..." என்ற பாடலை எழுதிய கார்த்திக் நேதாவுக்கு சிறந்த பாடலாசிரியருக்கான விருது வழங்கப்பட்டது. சிறந்த துணை நடிகருக்கான விருது அரவிந்த் சாமிக்கும், சிறந்த துணை நடிகைக்கான விருது லட்சுமி பிரியா சந்திரமவுலிக்கும் வழங்கப்பட்டது. மாநாடு படத்தில் நடித்த எஸ். ஜே சூர்யாவுக்கு சிறந்த வில்லன் வழங்கப்பட்டது.