நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ரசிகர்கள் பொது இடங்களிலோ அல்லது ஏதாவது விழா நிகழ்ச்சிகளிலோ தங்களது அபிமான நடிகர்களை நேரில் காணும்போது, அவர்களோடு இணைந்து செல்பி எடுத்துக் கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். பல நடிகர்கள், தங்களது ரசிகர்களின் இந்த செல்பி எடுக்கும் விஷயத்திற்கு பெரிய அளவில் ஆதரவு கொடுப்பது இல்லை. அதுவும் குறிப்பாக தங்களது சூழ்நிலை குறித்து கவனத்தில் கொள்ளாமல், மேலும் தங்களது அனுமதியை கூட பெறாமல், வலுக்கட்டாயமாக செல்பி எடுக்கும் ரசிகர்களிடம் கோபத்தை காட்டவும் செய்கின்றனர்.
இப்படி ஒரு நிகழ்வு சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கும் நடந்துள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக செல்ல, தனது காரில் ஏறுவதற்காக வரும் ஹிருத்திக் ரோஷனை பார்த்ததும் வேகமாக வந்த ரசிகர் ஒருவர் தனது மொபைல்போன் மூலம் அவருடன் செல்பி எடுக்க முயற்சிக்கிறார். இதற்காக சில நொடிகள் தனது கைகளை வைத்து ஹிருத்திக் ரோஷனை தடுத்து நிறுத்துகிறார். தன் அனுமதி இல்லாமல் அத்துமீறி செல்பி எடுத்த இந்த ரசிகரின் செயலால் அப்செட்டானார் ஹிருத்திக் ரோஷன். உடனடியாக அங்கிருந்த பவுன்சர்கள் அந்த இளைஞரை பிடித்து அப்புறப்படுத்தினர். உடனே அவர்களுடன் அந்த இளைஞர் சிறிதுநேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதைப் பார்த்தபடியே ஹிருத்திக் ரோஷன் தனது காரில் ஏறி கிளம்பினார் இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.