நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் மற்றும் அரவிந்த்சாமி இருவரும் இணைந்து நடித்துள்ள படம் ஓட்டு. டொவினோ தாமஸ் நடித்த தீவண்டி என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் டி.பி.பெலினி என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிப் படமாக ஒரே நேரத்தில் உருவாகி வந்தது. தமிழில் இந்தபடத்திற்கு ரெண்டகம் என டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. நடிகர் அரவிந்த்சாமி கிட்டத்தட்ட 25 வருட இடைவெளிக்கு பிறகு மலையாளத்தில் நடிக்கும் படமாகவும் மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் முதன் முறையாக தமிழில் அறிமுகமாகும் படமாகவும் இது உருவாகி வந்தது.
இந்த நிலையில் இந்த படம் மலையாளத்தில் மட்டும் வெளியாகி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு இந்த பட தயாரிப்பு நிறுவனம் இதன் தமிழ் படத்திற்கான வேலைகள் சற்று தாமதமாகவும் ஆனாலும் இந்த படத்தை மலையாளம் மற்றும் தமிழில் ஒரே நாளில் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் கூறியிருந்தது. ஆனால் மலையாளத்தில் ஓணம் பண்டிகைக்கு இந்த படத்தை வெளியிட ஏற்கனவே திட்டமிட்டு இருந்ததால் இப்போது இந்த படத்தின் மலையாள பதிப்பை மட்டும் வெளியிட்டுள்ளார்கள். தமிழ் பதிப்பு தயாரான பின்பு இன்னொரு நாளில் தமிழில் மட்டும் ரெண்டகம் படம் தனியாக வெளியாகும் என தெரிகிறது.