அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தமிழில் புது வசந்தம் படம் மூலமாக கால் பதித்த ஆர்பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் பல ஹிட் படங்களை கொடுத்ததுடன், பல திறமையான இயக்குனர்கள், நடிகர்களை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய நிறுவனமும் கூட. அந்தவகையில் இதுவரை 95 படங்களை தயாரித்துள்ள சூப்பர் குட் பிலிம்ஸ் தனது 96வது படமாக மலையாளத்தில் ‛ஹனுமான் கியர்' என்கிற படத்தை தயாரிக்கிறது. பஹத் பாசில் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை சுதீஷ் சங்கர் என்பவர் இயக்குகிறார். ஓணம் பண்டிகையை முன்னிட்டு இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
ஒரு ஜீப்பின் மீது ஏறி நின்றபடி வேட்டியை மடித்துக்கட்டிய பஹத் பாசில் கையை உயர்த்தியபடி நிற்பதையும் கீழே மக்கள் கூடி நிற்பதையும் பார்க்கும்போது போராட்ட களம் கொண்ட கதையாக இது இருக்கும் என்று தெரிகிறது. கடந்த 2014ல் திலீப் நடித்த வில்லாளி வீரன் என்கிற படத்தை தயாரித்த சூப்பர்குட் பிலிம்ஸ், தற்போது 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்த படம் மூலம் மலையாளத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.