Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

கடல் படத்தில் சர்ச்சை காட்சிகள்! கிறிஸ்தவ அமைப்பினர் புகார்!!

Maniratnams kadal under trouble
மணிரத்னத்தின் கடல் படத்தில், இயேசு பிரான் படத்தை உடைப்பது உள்ளிட்ட சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்று இருப்பதாக கூறி அப்படத்தை தடை செய்ய இந்திய கிறிஸ்தவ ஜனநாய கட்சியினர், சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார். தங்களது மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, மணிரத்னம் இயக்கியுள்ள கடல் படம் சமீபத்தில் ரிலீசாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தில் பல காட்சிகள் கிறிஸ்தவர்களை புண்படுத்தும்படி படமாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பைபிள் கல்லூரியில் படிக்க வரும் அரவிந்த்சாமியிடம், அர்ஜூன் இயேசுவுக்கு தம்பி சாத்தான் என்று கூறியிருக்கிறார். மேலும் அர்ஜூன் அடிக்கடி தன்னை சாத்தான் என்று கூறுகிறார். ஆனால் அவரது பெயரோ பெர்க்மான்ஸ், இந்தப்பெயர் கிறிஸ்தவ பாடகரின் பெயர். அதேப்போல் படத்தின் நாயகன் இயேசு படத்தை போட்டு உடைப்பதும், அவர் பெண் ஒருவருக்கு பிரசவம் பார்த்து தனது கையில் படிந்து இருக்கும் ரத்தம் இயேசுவின் ரத்தம் என்று கூறுகிறார். இப்படி பல காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளது. எனவே இப்படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்க வேண்டும். கிறிஸ்தவர்களை புண்படும்படி படம் எடுத்த மணிரத்னம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால், கடல் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் தியேட்டர்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளனர்.

Tags »
Maniratnam, Kadal, trouble, மணிரத்னம், கடல், சிக்கல்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (10)

ஷீலா - erode,இந்தியா
2013-02-05 13:48:48 Report Abuse
 ஷீலா உன்னை நேசிப்பது போல் பிறரையும் நேசி. எந்த பிரசனையும் இல்லை.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Joe - kanyakumari  ( Posted via: Dinamalar Android App )
2013-02-05 13:13:25 Report Abuse
Joe உனக்கு நான் இளைத்தவன் இல்லை னூ காட்டறாங்க ஆனால் உண்மையான கிறிட்தவர்கள் இதை கண்டு கொள்ள வில்லை.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மொக்கையன் - chennai,இந்தியா
2013-02-05 10:53:07 Report Abuse
 மொக்கையன் கண்ணு இது விளம்பரம் !!! யாருமே கடல் படம் ஓடுற தேட்டர் பக்கமே போக மாட்டேங்கறாங்க .. அதான் இந்த அந்தர் பல்டி ....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
பாலா - chennai,இந்தியா
2013-02-05 10:18:43 Report Abuse
 பாலா ஆரம்பிச்சிடாங்களா ! அம்மா இப்ப என்ன பண்ணுதுன்னு பாப்போம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
எஸ்.பானு - gummudipundi,இந்தியா
2013-02-05 08:09:09 Report Abuse
 எஸ்.பானு இதே பொலப்பா போச்சு. தயாரிப்பாளர் நடிக்கரவாளுக்கு பைசா குடுக்குராரோ இல்லியோ இந்த மாதிரி மத அமைப்புகளுக்கு டொனேசன வெட்டனும். அப்பத்தான் படம் வெட்டுபடாம ஓடும். நம்ம நாடு மதசார்பற்ற நாடான்னு டவுட்டா இருக்கு.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

தொடர்புடைய படங்கள்

 
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in