நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

இயக்குநர் சரவணன் சுப்பையா அஜித் நடித்த 'சிட்டிசன்', 'ஏபிசிடி', 'மீண்டும்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இயக்குநராக பெரிய அளவில் சாதிக்காத சரவணன் சுப்பையா தமிழில் ஏரளமான படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் தற்போது சின்னத்திரையில் சீரியலிலும் நடிகராக என்ட்ரி கொடுத்துள்ளார். கலர்ஸ் தமிழ் டிவியில் 'மந்திரபுன்னகை' என்ற குறுந்தொடர் ஒளிபரப்பி வருகிறது. இதில், மெர்ஷீனா நீனு, உசைன் அஹ்மத், நியாஸ் ஆகியோர் நடித்து வருகின்றனர். 150 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பாகவுள்ள இந்த தொடரில் டிடக்டிவ் ராகவன் என்ற கதாபாத்திரத்தில் சரவணன் சுப்பையா நடித்து வருகிறார். விசாரணை உள்ளிட்ட பல படங்களில் போலீஸ் ரோலில் கலக்கியிருந்த சரவணன் சுப்பையா, தற்போது இன்வெஷ்டிகேஷன் திரில்லர் ஜேனரில் ஒளிபரப்பாகி வரும் 'மந்திர புன்னகை' தொடரில் என்ட்ரி கொடுத்திருப்பது அந்த தொடர் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதே தொடரில் மற்றொரு முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் தேனப்பனும் நடித்து வருகிறார்.