நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

அட்டகத்தியில் அறிமுகமாகி அதன் பின்னர் எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, நளனும் நந்தினியும், உப்பு கருவாடு, இடம் பொருள் ஏவல், உள்குத்து, உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நந்திதா ஸ்வேதா. சமீபத்தில் கபடதாரி, நெஞ்சம் மறப்பதில்லை, ஐபிசி 376 படங்களில் நடத்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது பான் இந்தியா படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். தெலுங்கு இயக்குனர் கல்யாண் குமார் இயக்கும் இந்த படத்திற்கு ஓடிபி (ஒன் டைம் பாஸ்வேர்ட்) என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். இது ஆன்லைன் சூதாட்டம் முதல் ஆபாச தளங்கள் வரையிலான மோசடிகளை அம்பலப்படுத்தும் படமாக உருவாகிறது. இதனை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் பான் இந்தியா படமாக வெளியிட இருக்கிறார்கள்.