Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

பிப்-7ம் தேதி விஸ்வரூபம் ரிலீஸ்! கமல் அறிவிப்பு!!

04 பிப், 2013 - 15:47 IST
எழுத்தின் அளவு:

தமிழகத்தில் விஸ்வரூபம் படத்துக்கு எழுந்த பிரச்னை சுமூக முடிவுக்கு வந்துள்ளதை தொடர்ந்து இப்படம் தொடர்பான வழக்குகளும் வாபஸ் ஆன நிலையில் படம் பிப்-7ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். கமலின் பிரம்மாண்ட தயாரிப்பில், அவரே இயக்கி, நடித்துள்ள படம் விஸ்வரூபம். பயங்கரவாதத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கடந்த 25ம் தேதியே‌ தமிழகம் மற்றும் புதுவை தவிர்த்து பிற மாநிலங்களில் ரிலீஸ் ஆனது. தமிழகத்தில் முஸ்லிம் அமைப்புகள் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழக அரசும் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு விஸ்வரூபம் படத்தை தடை செய்தது.

தடை நீங்கி மீண்டும் தடை:
விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து கமல் வழக்கு தொடர்ந்தார். முதலில் விசாரித்த தனிநபர் நீதிபதி வெங்கட்ராமன் படத்துக்கான தடையை நீக்கி உத்த‌ரவிட்டார். இருந்தும் தமிழக அரசு மேல்முறையீடு செய்ததில் மீண்டும் இப்படத்திற்கு தடை விதித்தது சென்னை ஐகோர்ட்.

கமல் உருக்கம்: இதற்கிடையே இப்படத்தால் தமக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்தும், இப்படம் வெளியாகாவிட்டால் தான் இம்மாநிலத்தை விட்டோ அல்லது இந்த நாட்டை விட்டோ வெளியேறும் சூழல் உருவாகும் என்று பரபரப்பு பேட்டி கொடுத்தார் கமல். இதனால் படத்தின் பிரச்னையும் விஸ்வரூபமாக இந்தியா முழுக்க பேசப்பட்டது. கூடவே தமிழக அரசு மீது பிற கட்சிகள் குற்றம் சாட்ட ஆரம்பித்தனர்.

தடை ஏன்..? முதல்வர் விளக்கம் : நிலைமை வேறுவிதமாக சென்று கொண்டு இருப்பதை உணர்ந்த முதல்வர் இப்படத்திற்கு ஏன் தடை விதிக்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் கொடுத்தார். மேலும் கமல் மீது தனக்கு ‌எந்த தனிப்பட்ட வெறுப்பும் கிடையாது என்றும் கூறினார். அதேசமயம் இந்தவிஷயத்தில் கமல், முஸ்லிம் அமைப்புடன் சேர்ந்து சுமூகமாக பிரச்னையை தீர்த்து கொள்ள வேண்டும் என்றும், அதற்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் கூறினார்.

சமரசம் : முதல்வரின் இந்த பேச்சை தொடர்ந்து கமல் தரப்பினரும், முஸ்லிம் தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்தனர். அதன்படி கடந்த 2ம் தேதி உள்துறை செயலர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. முடிவில் சர்ச்சைக்குரிய சில காட்சிகளையும், சில வசனங்களில் ஒலியை நீக்கவும் கமல் சம்மதம் தெரிவித்தார். இதனையடுத்து முஸ்லிம் அமைப்பினரும் தங்களது போராட்டத்தை இத்தோடு முடித்து கொள்வதாகவும், தங்களது வழக்குகளையும் வாபஸ் பெறுவதாகவும் அறிவித்தனர். அதேப்போல் கமலும் தனது வழக்குகளை வாபஸ் பெறுவாக அறிவித்தார். இதனையடுத்து விஸ்வரூபம் படத்தின் பிரச்னைகள் தீர்ந்ததால் சென்னை ஐகோர்ட்டும் இப்படம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற சம்மதம் தெரிவித்தது. அதன்படி இன்று(04.02.13) அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டது.

பிப்., 7ம் தேதி ரிலீஸ் : விஸ்வரூபம் படம் தொடர்பாக எழுந்த பிரச்னைகளும், வழக்குகளும் முடிவுக்கு வந்துள்ளதால் படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகளில் கமல் தீவிரமாக இறங்கியுள்ளார். குறிப்பாக சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கும் பணியில் மும்முரமாக இருக்கிறார். இந்த பணிகள் அனைத்து இரு தினங்களில் முடிய இருப்பதால் படத்தை பிப்-7ம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக கமல் அறிவித்துள்ளார். மேலும் இப்படத்தை ரிலீஸ் செய்ய தனக்கு உறுதுணையாக இருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும், ரசிகர்களுக்கும் மற்ற கலைஞர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

கூடுதல் திரையரங்குகளில் ரிலீஸ் : விஸ்வரூபம் படம் தமிழகத்தில் 524 தியேட்டர்களில் ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் இப்படத்திற்கு எழுந்த பிரச்னைகள், இப்படத்தில் என்ன தான் இருக்கிறது என்ற ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. அதனால் அனைவரும் இப்படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று எண்ணியுள்ளனர். இதனால் ஏற்கனவே ரிலீஸாக இருந்த தியேட்டர்களுடன் கூடுதல் தியேட்டர்களிலும் விஸ்வரூபம் படம் திரையிடப்படலாம் என்று கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

GobiNath - kallakurichi,இந்தியா
05 பிப், 2013 - 15:25 Report Abuse
GobiNath santhosum
Rate this:
radhakrishnan - coimbatore,இந்தியா
05 பிப், 2013 - 14:23 Report Abuse
 radhakrishnan குட் film
Rate this:
திவ்யா - Chennai,இந்தியா
05 பிப், 2013 - 09:46 Report Abuse
 திவ்யா படம் கண்டிப்பாக வெற்றி பெரும் வாழ்த்துகள் ... :)
Rate this:
aaniye pudunga venam - Chennai,இந்தியா
05 பிப், 2013 - 09:42 Report Abuse
 aaniye pudunga venam Very good movie... Kamal's action is too too good in the movie. Surely he will get back the money what he invested...
Rate this:
v செண்பகராமன் - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05 பிப், 2013 - 08:30 Report Abuse
 v செண்பகராமன் விஸ்வருபம் ரிலீஸ் good
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in