நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவான திருச்சிற்றம்பலம் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் வெளியாகி 15 நாட்களை கடந்துவிட்ட நிலையில், 100 கோடிக்கும் மேல் வசூலை கடந்துள்ளது .
இதனை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், நானே வருவேன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம், செல்வராகவன் இயக்கி, வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார் . தனுஷுடன் எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகையும், இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு, பிரபு என பலர் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசைமைத்துள்ளார் .இந்த திரைப்படம் செப்டம்பர் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்தின் முதல் பாடலான வீரா சூரா என்ற பாடல் வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற இருகிறது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்துகொள்ள இருக்கிறார்கள் .