நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

புதுச்சேரி அரசு ஆண்டுதோறும் சிறந்த தமிழ் படம் ஒன்றை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. அந்த வரிசையில் கடந்த ஆண்டு வெளியான படங்களில் கூழாங்கல் சிறந்த படமாக விருதுக்கு தேர்வு செய்துள்ளது. வருகிற 9ம் தேதி நடக்கும் விழாவில் படத்தின் இயக்குனர் வினோத்ராஜுக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்பட இருக்கிறது.
நயன்தாரா, விக்னேஷ் சிவன் தங்கள் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்திருந்த இந்த படத்தை பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கி இருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இப்படம், ராட்டர்டாம் திரைப்பட விழாவில் விருதை வென்றது.
ஆஸ்கர் விருதுக்காக இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட படங்களின் பட்டியலிலும் இடம்பெற்றது. தந்தை மகனுக்கு இடையிலான ஒரு நாள் பயணத்தை சொல்லும் இந்த படத்தில் தந்தையாக செல்ல பாண்டியும், மகனாக கருத்திடையானும் நடித்திருக்கிறார்கள். இந்த படம் இன்னும் தியேட்டர்களில் வெளியாகவில்லை.