நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

அக்மார்க் தமிழ் பெண்ணான சாய்பல்லவி நடிகையாக அறிமுகமானது மலையாளத்தில். பிரேமம் படத்தின் மலர் டீச்சர் அவருக்கு மலையாள சினிமாவில் பெரிய ரசிகர் வட்டத்தை ஏற்படுத்தி கொடுத்தது. தமிழில் சில படங்களில் நடித்தாலும் அது அவருக்கு சரியாக அமையவில்லை. கடைசியாக வெளிவந்த கார்கி படம்தான் தமிழில் அவருக்கு கைகொடுத்த படம்.
ஆனால் தெலுங்கில் அவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட்டாக அங்கு டாப்பில் இருக்கிறார். அடிப்படையில் நடன கலைஞரான சாய்பல்லவி டாக்டரும் ஆவார். தற்போது அவர் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறர்.
இந்த நிலையில் தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் சாய்பல்லவி. சிகப்பு நிற புடவை கட்டி தலை நிறைய மல்லிகை பூ அணிந்து அவர் கோவிலை வலம் வந்துள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். “பிரகதீஸ்வரரின் அருள் உங்கள் வாழ்க்கையை பிரகாசமாக்கட்டும்” என்று நெட்டிசன்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.