நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பூரி ஜெகன்னாத், விஜய் தேவரகொண்டா கூட்டணியில் வெளிவந்த 'லைகர்' படம் அனைத்து மொழிகளிலும் படுதோல்வியைத் தழுவியது. வெளியீட்டிற்கு முன்பாக பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்ட படம். விஜய், அனன்யா இருவரும் ஊர் ஊராகச் சென்று படத்தைப் பற்றி ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தார்கள். ஆனால், படம் வெளியான பின்பு கதையே இல்லாத காரணத்தால் தோல்வியைத் தழுவியது.
இப்படத்தின் தோல்வி பூரி ஜெகன்னாத், விஜய் கூட்டணியில் அடுத்து உருவாகி வரும் 'ஜனகனமண' படத்தையும் பாதித்துள்ளது. இப்படத்தை 'லைகர்' வெளியீட்டிற்கு முன்பாகவே ஆரம்பித்தார்கள். கதாநாயகியாக 'பீஸ்ட்' நாயகி பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. அடுத்த வருடம் ஆகஸ்ட் 3ம் தேதி படம் வெளியீடு என்று கூட அறிவித்தார்கள்.
இந்நிலையில் பூரி ஜெகன்னாத்தும், விஜய் தேவரகொண்டாவும் கலந்து பேசி இப்படத்தை டிராப் செய்யும் முடிவுக்கு வந்துள்ளார்கள் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தற்காலிக டிராப்பா, நிரந்தர டிராப்பா என்பது பின்னர் தெரிய வரும்.