சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
சரித்திர நாவலான பொன்னியின் செல்வனை இரண்டு பாகங்களாக படமாக இயக்கி உள்ளார் மணிரத்னம். ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியதேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக திரிஷா, பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்னபழுவேட்டரையராக பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
சுந்தர சோழனாக பிரகாஷ்ராஜ், செம்பியான் மாதேவியாக ஜெயசித்ரா, மதுராந்தகனாக ரகுமான், வானதியாக நேகா துலிபாலா, பூங்குழலியாக ஐஸ்வர்ய லட்சுமி, பெரிய வேளாராக பிரபு, மலையமானாக லால மற்றும் பார்த்திபேந்திர பல்லவனாக விக்ரம் பிரபு மற்றும் ஆழ்வார்கடியன் நம்பியாக ஜெயராம் என ஏகப்பட்ட திரைநட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
பிரம்மாண்ட படமாக உருவாகி உள்ள இந்த படத்தை லைகா நிறுவனத்துடன் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். செப்., 30ல் பொன்னியின் செல்வன் முதல்பாகம் வெளியாக உள்ளது. இந்நிலையில் நாளை(செப்., 6) படத்தின் பிரமாண்ட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பார் என கூறப்பட்டது. ஆனால் அவர் பங்கேற்கவில்லை. அதேசமயம் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் பங்கேற்கின்றனர். இதற்கான அறிவிப்பை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் ரஹ்மானின் இசை நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.