நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

2022ம் ஆண்டில் ஒரு படக்குழுவினரால் சமூக வலைத்தளங்களில் மிகைப்படுத்தி சொல்லப்பட்ட படங்களில் ஒன்று 'லைகர்'. தெலுங்கின் ஹாட் ஹீரோ விஜய் தேவரகொண்டா, பாலிவுட்டின் ஹாட் கதாநாயகி அனன்யா பாண்டே, கரண் ஜோஹர் இணைந்த தயாரிப்பு, முன்னாள் உலகக் குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் சிறப்புத் தோற்றம் என என்னென்னமோ சொன்னார்கள்.
ஆனால், படம் வெளிவந்த பின் “இதற்காகவா இவ்வளவு பில்டப் கொடுத்தீர்கள்” என விமர்சகர்களும், ரசிகர்களும் ஒட்டுமொத்தமாகச் சொன்னார்கள். படத்தில் கதையம்சம் என்ற ஒன்றுதான் படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் என இந்தப் படமும் திரையுலகினருக்கு உணர்த்தியது.
தினமும் அந்தப் படம் பற்றி சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகள், தகவல்கள், மீம்ஸ்களைப் பார்ப்பதற்கும், படிப்பதற்கும் படக்குழுவினருக்கு தனி மனதைரியம் வேண்டும். அதனாலோ என்னவோ, இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான முன்னாள் நடிகையான சார்மி கவுர் தற்காலிகமாக சமூக வலைத்தளங்களிலிருந்து விலகுவதாக சற்று முன் அறிவித்துள்ளார்.
அவற்றில் மிகவும் ஆக்டிவ்வாகவே இருந்த சார்மி அவரது பதிவில், “சில் கைஸ், சமூக வலைத்தளங்களிலிருந்து கொஞ்சம் பிரேக் எடுக்கிறேன். பூரி ஜெகன்னாத் மீண்டு வருவார், பெரிதாக, சிறப்பாக…அது வரை... வாழு வாழ விடு,” என விலகலுக்கான காரணத்தைத் தெரிவித்துள்ளார்.