இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
ராட்சசன், அசுரன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் அம்மு அபிராமி. இவர் தற்போது பெண்டுலம் என்கிற சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். எட்டு முக்கிய பாத்திரங்களை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படத்தை சதீஷ் குமரன் என்பவர் இயக்குகிறார். அடிப்படையில் ஒளிப்பதிவாளரான இவர் ஷங்கர் இயக்கிய ஐ படத்தின் மேக்கிங் கேமராமேனாக பணியாற்றியவர். இந்தப் படத்தின் துவக்க விழா பூஜை இருதினங்களுக்கு முன் நடைபெற்றது.
இந்தநிலையில் மலையாளத்திலும் இதே போல பெண்டுலம் என்கிற ஒரு படத்தின் பெயரில் உருவாகிவரும் ஒரு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் அதேநாளில் வெளியிட்டுள்ளார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன் மலையாள துணை நடிகை ஒருவரின் பாலியல் புகார் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, வெளிநாட்டுக்கு சென்று தலைமறைவாகி, பின்னர் கேரளா திரும்பி பரபரப்பை ஏற்படுத்திய தயாரிப்பாளரும், நடிகருமான விஜய்பாபு இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
கடந்த 2012ல் மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் கோப்ரா என்கிற படம் வெளியானது. தற்போது தமிழில் அதே பெயரில் விக்ரம் நடிப்பில் கோப்ரா என்கிற படம் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு படங்களுக்கும் இடையே பத்து வருட இடைவெளி இருந்தது. ஆனால் தமிழில் தயாராகும் ஒரு படத்தின் பூஜை நடைபெற்ற அதே நாளில், மலையாளத்தில் அதே டைட்டிலில் வேறு ஒரு இயக்குனரின் டைரக்ஷனில் வேறொருவர் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வெளியானது அதிசயமான நிகழ்வு தான்.