நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவரும், தமிழில் 'அசுரன்' படத்தில் நடித்தவருமான மஞ்சு வாரியர் தற்போது அஜித்தின் 61வது படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மஞ்சு வாரியர் பைக் ஓட்டுவதில் அதிக ஆர்வம் உள்ளவர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
அஜித் மற்றும் பைக்கில் சுற்றும் குழுவினருடன் அவரும் பைக் ஓட்டிக் கொண்டு லடாக் சென்றுள்ளார். தங்களது 'சாகச சவாரி' குழுவிற்கு மஞ்சுவை வரவேற்று புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்தக் குழுவில் உள்ள ஒருவர். மஞ்சுவும் சில புகைப்படங்களை வெளியிட்டு தனது சுற்றுப் பயண அனுபவம் பற்றியும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

“சூப்பர் ஸ்டார் ரைடர் அஜித்குமார் சாருக்கு பெரும் நன்றி. இந்திய சாகச சவாரி குழுவினருடன் டூ வீலர் சுற்றுலா செல்வதில் பெருமை,” எனக் குறிப்பிட்டுள்ளார். நள்ளிரவில் மஞ்சு வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பல்லாயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.