நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களுக்குக் கூட படத்தை ஓட வைக்க என்னவெல்லாமோ செய்ய வேண்டி இருக்கிறது. கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'விக்ரம்' படத்திற்கு அவர் தனியொருவனாக பிரமோஷன் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
அவருக்கடுத்து நடிகர் விக்ரம் அவர் நடித்து வெளிவந்த 'கோப்ரா' பயணத்திற்காக சுற்றி வந்தார். அடுத்ததாக நடிகர் ஆர்யா அடுத்த வாரம் வெளியாக உள்ள அவரது 'கேப்டன்' படத்திற்காக தன்னுடைய சுற்றுப் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
நேற்று திருநெல்வேலி, மதுரையில் அவருடைய சுற்றுப் பயணம் ஆரம்பமானது. அடுத்து கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திருச்சி, நாமக்கல், தஞ்சாவூர் என தன்னுடைய அடுத்த இரண்டு நாட்கள் சுற்றுப் பயணத்தை 'கேப்டன் பரேடு' என ஆர்யா தெரிவித்துள்ளார்.