நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

இந்தியத் திரையுலகத்தில் பெரும் வசூல் சாதனையைப் புரிந்த படம் 'பாகுபலி 2'. ராஜமவுலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா டகுபட்டி, அனுஷ்கா, சத்யராஜ் மற்றும் பலர் நடித்து 2017ல் வெளிவந்த படம். இன்றைய பல பான் இந்தியா படங்களுக்கு அப்படம்தான் முன்னுதாரணமாய் இருக்கிறது என பலரும் சொல்லி வருகிறார்கள்.
அதே சமயம், தமிழில் இதற்கு முன்பு வந்த சரித்திரப் படங்களின் கதைகளை மையமாக வைத்து கதையை உருவாக்கி கிராபிக்ஸ், விஎப்எக்ஸ் என புதுமையைச் சேர்ந்து ராஜமவுலி அப்படத்தைக் கொடுத்தார் என அப்போதே ஒரு குற்றச்சாட்டும் எழுந்தது.
இந்நிலையில் தற்போது 29 ஹாலிவுட் படங்களில் இடம் பெற்ற காட்சிகளை அப்படியே 'சுட்டு' தனது 'பாகுபலி 2' படத்தில் ராஜமவுலி பயன்படுத்தி இருக்கிறார் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அதில் அந்த 29 வெவ்வேறு விதமான படங்களின் காட்சிகளும், அதை எப்படி 'பாகுபலி 2' படத்தில் பயன்படுத்தி உள்ளார் என்பதையும் எடிட் செய்து பதிவிட்டுள்ளார்கள்.
தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் கல்கியின் நாவலான 'பொன்னியின் செல்வன்' படம் இந்த மாதக் கடைசியில் வெளிவர உள்ளது. இப்படத்தை 'பாகுபலி 2' படத்தின் தாக்கத்தினால் தான் மணிரத்னம் எடுத்துள்ளார் என்றும் ஒரு விமர்சனம் எழுந்தது. அதே சமயம் 'பாகுபலி 2' படத்தில் 'பொன்னியின் செல்வன்' நாவலின் பல காட்சிகளை எடுத்து ராஜமவுலி கையாண்டுள்ளார் என்ற விமர்சனமும் உள்ளது.