நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

துப்பாக்கிமுனை, ராட்சன் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அம்மு அபிராமி, அசுரன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து புகழ்பெற்றார். அதன் பிறகு பல படங்களில் நாயகியாக நடித்து வரும் அபிராமி தற்போது ஒப்பந்தமாகி உள்ள படம் பெண்டுலம். இந்த படத்தில் அவர் சட்டப்படி குற்றம், நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ, வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்த கோமல் சர்மாவுடன் இணைந்து நடிக்கிறார்.
திரவியம் பாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பி.சதீஸ் குமரன் இயக்குகிறார். சைக்கலாஜிகல், பேண்டஸி திரில்லர் படமாக இது உருவாகிறது. ஶ்ரீபதி, ஶ்ரீகுமார், விஜித், ராம், பிரேம் குமார், கஜராஜ், சாம்ஸ் உள்பட பலர் நடிக்கிறார்கள். சைமன் கிங் இசை அமைக்கிறார், ஆனந்த் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் பி.சதீஸ்குமரன் கூறியதாவது: நான் 20 ஆண்டுகளாக ஒளிப்பதிவாளராக இருக்கிறேன். விளம்பர படங்கள், குறும்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். இயக்குநர் ஷங்கரின் ஐ படத்தில் மேக்கிங் கேமராமேனாக பணியாற்றினேன். இந்த படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறேன்.
தமிழ் சினிமாவில் சைக்கலாஜிகல் படங்கள் அரிது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் இதுவரையிலும் சொல்லப்படாத புதுமையான திரைக்கதையில், சைக்கலாஜிகல் பேண்டஸி திரில்லர் திரைப்படமாக உருவாகிறது. இப்படத்தில் முதல்முறையாக 8 கதாப்பாத்திரங்கள் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் புதுமையான திரைக்கதையில் சொல்லப்படும் ஒரு விறுவிறுப்பான திரில்லராக இப்படம் உருவாகிறது. இதுவரை படப்பிடிப்பு நடத்தப்படாத இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறோம். என்றார்.