மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
விநாயகர் சதுர்த்தி திருவிழா நாடெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் பலரும் தங்களது ரசிகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதேசமயம் இவற்றில் பாலிவுட் முன்னணி நடிகர் சல்மான்கான் விநாயகர் சதுர்த்தியை தனது குடும்பத்தினரோடு கொண்டாடியது ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆச்சரியத்தையும், சந்தோசத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் தனது தங்கை அர்பிதா வீட்டில் கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தியில் சல்மான்கான் கலந்து கொண்டார். மேலும் விநாயகர் சிலைக்கு முன்பாக நின்று சூடம் ஏற்றிய தட்டுடன் ஆரத்தியும் சுற்றி காட்டினார் சல்மான்கான். இதுகுறித்த வீடியோவையும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் சல்மான் கான்.
இவரது தந்தை சலீம்கானின் முதல் மனைவி சல்மா மகாராஷ்டிராவை சேர்ந்த ஒரு இந்து மற்றும் இரண்டாவது மனைவி முன்னாள் நடிகையான ஹெலன் ஒரு கிறிஸ்தவர் என்பதால் இவர்களது குடும்பத்தில் ரம்ஜான், தீபாவளி, கிறிஸ்துமஸ், விநாயகர் சேர்த்து என அனைத்து மதத்திற்கான பண்டிகைகளும் கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்களாம்.
ஷாருக்கான்
நடிகர் ஷாருக்கான் தனது வீட்டில் விநாயர் சிலையை அலங்கரித்து சதுர்த்தியை கொண்டாடி இருக்கிறார். அந்த படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு "கணபதிஜியை வீட்டிற்கு வரவழைத்தோம். கற்றல், கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் கடவுள் நம்பிக்கை ஆகியவற்றின் மூலம் உங்கள் கனவுகளை நனவாக்க முடியும். அனைவருக்கும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்" என எழுதியுள்ளார்.