நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பிரபல பின்னணி பாடகர் பம்பா (49) பாக்யா உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரின் திடீர் மரணம் திரையுலகினர், ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, பாடி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானால் திரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டவர் பம்பா பாக்யா. ராவணன் படத்தில் தொடங்கியது அவரது திரைப்பயணம். ‛சர்கார்' படத்தில் இடம் பெற்ற ‛சிம்டாங்காரன்...' பாடல் அவரை இன்னும் பிரபலமாக்கியது. ‛2.0' படத்தில் இடம் பெற்ற ‛புல்லினங்காள்...' பாடலையும் இவர் தான் பாடியிருந்தார். ‛பிகில்' படத்தில் வரும் ‛காலமே காலமே...' போன்ற பாடல்களையும் பாடி உள்ளார். இம்மாதம் வெளியாக உள்ள ‛பொன்னியின் செல்வன்' படத்தில் இடம்பெற்றுள்ள ‛பொன்னி நதி' பாடலின் ஆரம்ப வரிகளையும் இவர் தான் பாடி உள்ளார்.
சந்தோஷ் தயாநிதி இசையில் வெளியான 'ராட்டி' ஆல்பம் பாடல் இளைஞர்களை கவர்ந்தது. அதில் பம்பா பாக்யாவின் குரல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த பாடலின் வீடியோவை 1.74 கோடிக்கும் அதிகமான பேர் பார்த்துள்ளனர்.
மறைந்த பம்பா பாக்யாவின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்று அவரது இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.