இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

'அசுரன்' படத்திற்குப் பிறகு விடுதலை திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கவுதம் மேனன், பிரகாஷ் ராஜ், ஆகியோர் நடித்துள்ளனர். ஜெயமோகனின் 'துணைவன்' சிறுகதையை மையமாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. இளையராஜா இசை அமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படம் டிசம்பருக்குள் நிறைவடையும் என தெரிகிறது.
இந்நிலையில் விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் முக்கிய தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று(செப்., 1) வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள், இயக்குனர்களின் படங்களை உதயநி்தியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தொடர்ந்து கைப்பற்றி வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் இப்போது விடுதலை-யும் இணைந்துள்ளது.