இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

விஜய் டிவி பிரபலமான பிரணிகா தக்ஷூ 'பாவம் கணேசன்', 'பாக்கியலெட்சுமி', 'கனா காணும் காலங்கள் -2' ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். தற்போது ஜீ தமிழ் சேனலின் 'மீனாட்சி பொண்ணுங்க' தொடரிலும் நடித்து வருகிறார். தவிர சினிமாவிலும் என்ட்ரி கொடுத்துள்ள பிரணிகா, 'இனி ஒரு காதல் செய்வோம்', 'வடசேரி' ஆகிய படங்களிலும் கமிட்டாகியுள்ளார். மாடல் அழகியாக கலக்கிக் கொண்டிருக்கும் ப்ரணிகா பல இளைஞர்களின் தூக்கம் கெடுத்த காதல் கன்னி ஆவார். பலரும் அவருக்கு புரொபோஸ் செய்து லவ் டார்ச்சர் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரணிகா வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பிரணிகா தக்ஷூ, நவ்னீத் ராஜன் என்பவருடன் சேர்ந்து வாரணம் ஆயிரம் படத்தின் ஹிட்டான காதல் பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ செய்து வெளியிட்டுள்ளார். அதன் கேப்ஷனிலும் 'நமக்குள் எத்தனை சண்டை போட்டாலும் நான் உன்னை காதலிப்பதை நிறுத்தமாட்டேன்' என பதிவிட்டுள்ளார். அந்த பதிவுக்கு கீழே நடிகர் ஏகன் என்பவர் 'அடடா கப்புள்ஸ் கோலா?' என கேட்க, அதை ஆமோதிப்பது போல் லவ் எமோஜியை பிரணிகா பதிவிட்டுள்ளார். இதன் மூலம் பிரணிகா தனது காதலை ஒத்துக்கொண்டார் என்பது கிட்டத்தட்ட நிரூபணமாகிவிட்டது. இதனால் அவரது ரசிகர்கள் பலரும் பொசஸிவில் பொங்கி வருகின்றனர். இருப்பினும் அவரது காதல் வெற்றி பெற வேண்டும் எனவும் வாழ்த்தி வருகின்றனர்.