விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் | 'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? | ரிலீஸ் தேதி குழப்பத்தில் 'கருப்பு' : காத்திருக்கும் ரசிகர்கள் | பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல் | பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா | 50 பேர் ஆசீர்வாதத்தால் கிடைத்த வாய்ப்பு: நமிதா நெகிழ்ச்சி | ஜெய் படம் மூலம் தமிழுக்கு வரும் கன்னட நடிகை | ஆண்ட்ரியா படத்தின் காட்சிகளை மாற்ற நீதிமன்றம் உத்தரவு |
பாகுபலி ரேன்ஞ்சுக்கு பாலிவுட்டில் உருவாகி வரும் படம் பிரம்மாஸ்திரா. சிவ பெருமானின் அக்னி அருள் பெற்ற ஒருவனின் சாகச பயணம் தான் படத்தின் கதை. இந்த படம் இரண்டு பாகமாக வெளிவருகிறது. முதல் பாகம் சிவா என்ற பெயரில் வருகிற 9ம் தேதி வெளிவருகிறது. இதில் ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப்பச்சன், நாகார்ஜூனா, மவுனிராய் உள்பட பலர் நடித்திருக்கிறார். பான் இந்தியா படமாக தயாராகி உள்ளது.
அயன் முகர்ஜி இயக்கி உள்ள இந்த படத்தை கரண் ஜோஹர், ரன்பீர் ஆகியோர் நண்பர்களுடன் இணைந்து 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்திருக்கிறார்கள். இந்த நிலையில் பல வருடங்களுக்கு முன்பு ரன்பீர் கபூர் அளித்த பேட்டி ஒன்று தற்போது படத்திற்கு எதிராக வந்து நிற்கிறது. அந்த பேட்டியில் அவர் தான் மாட்டு இறைச்சியை விரும்பி சாப்பிடுவதாக தெரிவித்திருந்தார்.
இதனால் வட இந்தியாவில் உள்ள சில அமைப்புகள் மாட்டு இறைச்சியை உண்ணும் ரன்பீர் கபூரின் படத்தை புறக்கணியுங்கள் (பாய்காட் பிரமாஸ்திரா) என்று கோஷத்தை முன்னெடுத்துள்ளனர். இது தொடர்பாக ஹேஸ்டாக்கையும் உருவாக்கி உள்ளனர். இது படத் தயாரிப்பு தரப்புக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
அமீர்கான் நடித்த லால் சிங் சத்தா, அக்ஷய்குமார் நடித்த ரக்ஷா பந்தன் படங்கள் இதுபோன்ற பாய்காட் டிரண்டிங்கால் பெரும் தோல்வி சந்தித்தால் இது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. விரைவில் இதுகுறித்து படத்தின் தயாரிப்பு தரப்பில் இருந்து விளக்க அறிக்கை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.