இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

தமிழ் சினிமாவில் ஒரே பெயரில் அதிக பிரபலமில்லாத சில நடிகர்கள், இயக்குனர்கள் இருக்கிறார்கள். ஆனால், தமிழில் தற்போதைய வசூல் நடிகர்களில் முதன்மையானவராகக் கருதப்படும் நடிகர் விஜய்.
இந்த 'விஜய்' என்ற பெயரை தங்களது முதல் பெயராகவோ, இடைப் பெயராகவோ வைத்துள்ள பல நடிகர்கள் ஏற்கெனவே இருக்கிறார்கள். விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, விஜய் வசந்த், விஜய் யேசுதாஸ் உள்ளிட்ட பல நடிகர்களும் 'விஜய்' என ஆரம்பிக்கும் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் எனப் பலரும் இருக்கிறார்கள்.
அந்த வரிசையில் தற்போது மற்றுமொரு விஜய் அறிமுகமாக உள்ளார், அவர் விஜய் கனிஷ்கா. தமிழ்த் திரையுலகில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர் விக்ரமனின் மகன். கேஎஸ் ரவிக்குமார் தயாரிப்பில் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகும் 'ஹிட் லிஸ்ட்' படம் இன்று ஆரம்பமாக உள்ளது. இந்தப் படத்தில் சரத்குமாரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சூர்யகதிர் - கார்த்திகேயன் இயக்குகிறார்கள்.
தனது சிஷ்யர் கேஎஸ் ரவிக்குமார் தயாரிப்பிலும், தனது இயக்கத்தில் வந்த சூப்பர் ஹிட் படமான 'சூர்ய வம்சம்' படத்தில் கதாநாயகனாக நடித்த சரத்குமார் உடன் நடிக்க தனது மகன் விஜய் கனிஷ்காவை அறிமுகப்படுத்துகிறார் விக்ரமன். இன்று இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற உள்ளது.