நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகை குஷ்பு, சமீபத்தில் யுடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: எனக்கு மூன்று அண்ணன்கள். வீட்டில் நான் தான் கடைக்குட்டி. மும்பையில் நாங்கள் வசித்த பகுதி ஒரு குட்டி இந்தியா மாதிரி. நாங்கள் இரண்டு முஸ்லிம் குடும்பங்கள் இருந்தோம். மற்றபடி, அங்கிருந்தவர்கள் அனைவருமே பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தீபாவளி, கிருஷ்ண ஜெயந்திகளுக்கு நடுவேதான் நாங்கள் வளர்ந்தோம். விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் அவர்கள் கொடுக்கும் கொழுக்கட்டைக்காக ஜெய் ஜெய் கோஷம் போடுவோம். நான் சென்னை வந்த பிறகு எனது மூன்று அண்ணனும் கூடவே வந்துவிட்டார்கள்.
அண்ணனுக்கு நடிகை ஹேமமாலினி மற்றும் அவர்களது குடும்பம் நல்ல பழக்கம். அதனால் அவருடன் அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி செல்வோம். அங்குதான் அவர்கள் வீட்டில் இட்லி, தோசை எல்லாம் சாப்பிடுவேன். அப்படி ஒருமுறை சென்றபோதுதான் தயாரிப்பாளர்கள் ரவி சோப்ரா மற்றும் அவரது தந்தை பி.ஆர். சோப்ரா வந்திருந்தார்கள். என்னைப் பார்த்ததும் இந்த பெண் நடிப்பாளா எனக் கேட்டார்கள். நான் நடிச்சா என்ன தருவீங்க எனக் கேட்டேன். உனக்கு என்ன வேணும் என அவர்கள் கேட்கவும் தினமும் ஒரு கப் வெண்ணிலா ஐஸ்க்ரீம் என பதில் அளித்தேன். இது நடந்தபோது எட்டு வயது. அவர்கள்தான் என்னுடைய பெயரை குஷ்பு என மாற்றினார்கள். இஸ்லாத்தில் நிக்கத் எனதான் பெயர் உண்டு. என்னுடைய பெயர் நக்கத் என்பது பெர்ஸிய மொழி சார்ந்ததாக இருந்தது. அதனால் அதற்கு ஈடான ஹிந்தி பெயரை 'குஷ்பு' என எனக்குச் சூட்டினார்கள்” என்கிறார்.