மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தமிழ் சினிமாவில் பல வருடப் போராட்டங்களுக்குப் பிறகு கதாநாயகனாக ஒரு இடத்தைப் பிடித்துள்ளவர் அருண் விஜய். 1995ல் அறிமுகமானாலும் அவர் நடிப்பில் பத்து வருடங்களுக்கு முன்பாக வெளிவந்த 'மலை மலை, மாஞ்சா வேலு, தடையறத் தாக்க' படங்களின் மூலம் கொஞ்சம் முன்னேறி வந்தார். அடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் அவருக்கு இன்னும் அதிகமான பிரபலம் கிடைத்தது. அதைப் பயன்படுத்தி சில நல்ல கதைகளில் நடித்து இன்று முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.
அருண் விஜய் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'யானை' படம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. அதைத் தொடர்ந்து அவர் நடித்து முடித்து கொரானோ தாக்கம் காரணமாக வெளியாகாமல் இருந்த சில படங்களை அடுத்தடுத்து வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். அந்த விதத்தில் ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள 'சினம்' படம் செப்டம்பர் மாதம் 16ம் தேதியும், அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள 'பார்டர்' படம் அக்டோபர் 5ம் தேதியும் வெளியாக உள்ளது. இதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
அருண் விஜய், விஜய் ஆண்டனி இணைந்து நடித்துள்ள 'அக்னிச் சிறகுகள்' படமும் அப்படங்களுக்குப் பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.