நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ரோஜா படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி 100க்கும் அதிகமான படங்களுக்கு மேல் இசையமைத்து இருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆஸ்கர் விருது வென்று சாதனை படைத்த இவர் தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் ரஹ்மானை கவுரவிக்கும் விதமாக கனடா நாட்டில் மர்காம் என்ற நகரில் உள்ள தெருவிற்கு ஏ.ஆர்.ரஹ்மான் என பெயர் சூட்டி உள்ளனர். இதுதொடர்பான போட்டோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதற்கு நன்றி தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் ரஹ்மான்.

அதில், ‛‛ஒரு போதும் இதை நான் என் வாழ்நாளில் எதிர்பார்த்ததில்லை. கனடா மக்களுக்கும், மர்கான் நகர மேயருக்கும் நன்றி உள்ளவனாக இருப்பேன். ரஹ்மான் என்பது பெயரல்ல. அந்த சொல்லுக்கு இரக்கமுள்ளவர் என்று பொருள். இரக்கம் என்பது நம் அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான குணம். எனவே அந்த பெயர் கனடாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் அமைதி, செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை கொண்டு வரட்டும். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்'' என தெரிவித்துள்ளார்.
ரஹ்மான் பெயர் கனடா நாட்டு தெருவுக்கு சூட்டுவது இது முதல்முறையல்ல. கடந்த 2013ல் ஒரு நகரில் உள்ள தெருவுக்கு ‛அல்லா ரக்கா ரஹ்மான்' என அவரது பெயர் சூட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.