நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சின்னத்திரை, வெள்ளித்திரை என்ற பாகுபாடு பார்க்கும் காலம் மாறி, எந்த தளமாக இருந்தாலும் மக்களுக்கு பிடித்துவிட்டால் அவர்களை கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் சின்னத்திரை மூலம் மக்களால் கொண்டாடப்பட்ட பலர் தற்போது வெள்ளித்திரையில் நாயகர்களாக ஜொலித்து வருகிறார்கள்.
'திருமணம்' என்ற தொடர் மூலம் மக்களிடம் பிரபலமான சித்து சித், தற்போது 'ராஜா ராணி 2' தொடரில் ஹீரோவாக நடித்து வருவதோடு, தமிழ் ரசிகர்களின் பேவரைட் சின்னத்திரை ஹீரோவாகவும் உயர்ந்துள்ளார். சுமார் 6 ஆண்டுகளாக நடன கலைஞராக பணியாற்றிய இவர் பின் நடிகர் வாய்ப்பை பெற்றவர், திருமணம் தொடர் மூலமாக மக்களிடம் பிரபலம் ஆனார்.
சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு திருவண்ணாமலையில் இருந்து வந்து இன்று தனக்கென்று தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியிருக்கும் சித்து சித் தனது அடுத்த இலக்காக வெள்ளித்திரையை நோக்கி பயணிக்க தயாராகி வருகிறார். சில திரைப்பட வாய்ப்புகளும் அவருக்கு தேடி வந்துள்ளது. எனவே விரைவில் வெள்ளித்திரையில் சித்து சித் ஹீரோவாக களம் இறங்குவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் சித்து சித் எடுத்த புகைப்படங்கள் வைரலானது.