நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

வெற்றி பெற்ற ஒரு படத்திற்கு இரண்டாம் பாகம் எடுக்க எல்லோருமே ஆசைப்ப்படுவார்கள். ஆனால் அப்படி இரண்டாம் பாகத்தையும் முதல் பாகம் அளவிற்கு வெற்றிப்படமாக கொடுப்பவர்கள் வெகு சிலரே. அப்படி கடந்த 8 வருடங்களுக்கு முன் மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த வருடம் இந்த படத்தின் இரண்டாம் பாகம் திரிஷ்யம்-2 என்கிற பெயரில் வெளியானது. முதல் பாகத்தில் இருந்த அதே பரபரப்பு, திரில்லிங், ட்விஸ்ட் என இந்த படத்திலும் சற்றும் குறைவில்லாமல் இருந்தது. ஓடிடி தளத்தில் வெளியானாலும் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் இந்த படத்தின் மூன்றாம் பாகம் எப்போது உருவாகும் என ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கேள்வி எழுப்பி வந்தனர். இயக்குனர் ஜீத்து ஜோசப்பும் இதற்கான ஸ்கிரிப்ட் தயாரானால் மூன்றாம் பாகம் ஆரம்பிக்க வாய்ப்பு இருக்கிறது என்று சூசகமாக சொல்லியிருந்தார். இந்த நிலையில் இந்த இரண்டு பாகங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் சமீபத்திய விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டபோது திரிஷ்யம் 3 படம் நிச்சயமாக உருவாக இருக்கிறது. அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது” என்று அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளார். மூன்றாம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் ரசிகர்கள் இந்த அறிவிப்பால் உற்சாகமாகி உள்ளனர்.