நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த பிசாசு பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் தற்போது அதன் இரண்டாம் பாகத்தை இயக்கி இருக்கிறார். இதில் ஆண்ட்ரியா, நாகா, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள், விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்திருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து பேசிய மிஷ்கின் “நிர்வாண காட்சிகள் படமாக்கப்படவில்லை போட்டோக்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. அதையும் நான் பார்க்கவில்லை. பிசாசு படத்தை குழுந்தைகளும் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். நிர்வாண காட்சியை பயன்படுத்தினால் ஏ சான்றிதழ்தான் கிடைக்கும், குழந்தைகள் பார்க்க முடியாது என்பதால் அந்த காட்சியை படத்தில் வைக்கப்போவதில்லை” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ஏ சான்றிதழ்தான் தரமுடியும், பயமுறுத்தும் வன்முறை காட்சிகள் இருக்கிறது என்று கூறிவிட்டதாக தெரிகிறது. இதனால் மிஷ்கின் உள்ளிட்ட படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பி குறைந்தபட்சம் யுஏ சான்றிதழாவது தாருங்கள் என்று மேல்முறையீடு செய்ய இருக்கிறார்களாம்.