நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

அஜித் நடித்து வரும் அவரது 61வது படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து விட்டதாக தெரிகிறது. எச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் மஞ்சு வாரியர் நாயகியாக நடிக்கிறார். போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் வெளிநாட்டில் நடந்தபோது அஜித் அங்கு நீண்ட தூர பைக் பயணம் மேற்கொண்டார். குறிப்பாக பாலைவனத்தில் அவர் மேற்கொண்ட பயணம் பேசப்பட்டது.
தற்போது படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் இமயமலையில் பைக் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து விமானத்தில் லடாக்கிற்கு சென்ற அஜித், அங்கு தனது நண்பர்களுடன் இணைந்து இமயமலை சாலையில் பைக் பயணத்தை மேற்கொண்டுள்ளார். 4 நாட்கள் வரை அவர் இமயமலையை சுற்றி வருகிறார்.
இந்த பயணத்தில் எடுக்கப்பட்ட படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் அஜித் ஓட்டும் பைக்கில் நெவர் எவர் கிவ் அப் என்று எழுதப்பட்டுள்ளது. இது விவேகம் படத்தில் அஜித் பேசும் பன்ஞ் டயலாக். இந்த பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியதும் 61வது படத்தின் டப்பிங் பணியில் இணைவார் என்று தெரிகிறது. நடிகர்கள் ஆன்மிக தேடலுக்காக இமயமலையை சுற்றும்போது அஜித் சாகசத்துக்காக சுற்றுகிறார்.