நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி |
சமீபத்தில் ராஜ்யசபா எம்பி ஆன இசையமைப்பாளர் இளையராஜா, தற்போது விடுதலை உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதோடு வெளிநாடுகளுக்கு சென்றும் அடிக்கடி இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஹங்கேரியில் நடக்கும் இசை கச்சேரிக்காக இன்று அதிகாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் நாட்டுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தார் இளையராஜா. அதிகாலை 2 மணிக்கு விமானம் புறப்படும் என்பதால் அதற்கு முன்னதாகவே அவர் சென்னை விமான நிலையத்துக்கு வந்து விட்டார். ஆனால் நேற்று இரவு பலத்த மழை பெய்ததின் காரணமாக விமானங்கள் புறப்படுவது மற்றும் தரை இறங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டது.
குறிப்பாக, சென்னையில் தரையிறங்க இருந்த விமானங்கள் பெங்களூரு, ஐதராபாத் என்று மற்ற விமான நிலையங்களில் தரை இறக்கப்பட்டன. இதன் காரணமாக இளையராஜா துபாய்க்கு செல்ல இருந்த விமானமும் தாமதமானது. அதன் பிறகு ஓடுதளத்தில் மழை நீர் தேங்கி இருந்ததால் மேலும் 3 மணி நேரம் தாமதமாகும் என்று விமான நிலையம் அறிவித்தது. பின்னர் வானம் மேகமூட்டமாக இருந்ததால் இரண்டு மணி நேரம் தாமதமாக்கப்பட்டது. இப்படியாக 7 மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருந்து விட்டு அதன் பிறகு துபாய்க்கு புறப்பட்டு சென்றுள்ளார் இளையராஜா.