ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்திற்குப் பிறகு 'நெப்போட்டிசம்' சர்ச்சை அங்கு இன்னமும் இருந்து வருகிறது. வாரிசு நடிகர்களின் புதுப் புதுப் படங்கள் வரும் போது, அவர்களுக்கு ஆதரவு தருபவர்களின் படங்கள் வரும் போது குறிப்பிட்ட நபர்களையோ, படங்களையோ 'பாய்காட்' செய்ய வேண்டும் என டிரெண்டிங்கை ரசிகர்கள் ஏற்படுத்தி வருகிறார்கள். அதனால் பல முன்னணி நடிகர்களின் ஹிந்திப் படங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.
இந்த வருடத்தில் பாலிவுட்டில் வெளிவந்த பல முக்கிய படங்கள் எதிர்பாராத தோல்வியை சந்தித்துள்ளன. சமீபத்தில் ஆமீர்கான் நடிப்பில் வெளிவந்த 'லால் சிங் சத்தா' படமும், சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த விஜய் தேவரகொண்டாவின் 'லைகர்' படமும் 'பாய்காட்' டிரெண்டிங்கில் வசமாக சிக்கி தோல்வியைத் தழுவியுள்ளன. விஜய் தேவரகொண்டா வாரிசு நடிகராக இல்லாமல் சுயமாக முன்னேறியவர்தான். இருந்தாலும் அந்தப் படத்தை கரண் ஜோஹர் இணைந்து தயாரித்ததே 'பாய்காட்'டிற்குக் காரணமாக அமைந்துவிட்டது.
அடுத்து 'பாய்காட்' டிரெண்டிங்கில் 'பிரம்மாஸ்திரா' படம் சிக்கியுள்ளது. இப்படத்தில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், நாகார்ஜுனா, ஆலியா பட், மவுனி ராய் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். ஹிந்தியில் தயாராகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது. 'பாய்காட் பிரம்மாஸ்திரா' என்ற டிரெண்டிங் கடந்த சில நாட்களாக டிரெண்டிங்கில் போய்க் கொண்டிருக்கிறது. அந்த வலையில் இந்தப் படமும் சிக்குமா, தப்பிக்குமா என்பது பாலிவுட்டிலும், ரசிகர்களிடத்திலும் பெரும் கேள்வியாக உள்ளது.