இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‛கோப்ரா'. விக்ரம் பல விதமான வேடங்களில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வரும் ஆக.,31ல் படம் வெளியாக உள்ளது.
கணித வாத்தியரான விக்ரமின் வாழ்வில் ஏதோ ஒரு விபரீத சம்பவ நடக்க, அதற்கு பழிதீர்க்க தனது கணித அறிவால் வில்லன்களை பழிதீர்ப்பது போன்று கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இப்படத்தின் நீளம் மொத்தம் 3 மணிநேரம், 3 நிமிடங்கள், 3 நொடிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.