நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சமூக வலைத்தளங்களின் தாக்கம் சினிமாத் துறையில் அதிகமான பிறகு 'பெய்டு பிரமோஷன்' என்பது அதிகமாகிவிட்டது. டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் அதிக பாலோயர்களை வைத்திருக்கும் 'சினிமா டிராக்கர்ஸ்' எனப்படும் தனி நபர்களிடம் பணம் கொடுத்து படங்களை பிரமோஷன் செய்ய வைக்கிறார்கள். முன்பெல்லாம் அவற்றை நிஜம் என நினைத்த ரசிகர்கள் தற்போதுதான் தெளிவடைந்துள்ளனர். வருமானம் வருவதற்காக மோசமான படங்களைக் கூட நல்ல படங்கள் பார்க்கலாம் என சொல்ல ஆரம்பித்திருப்பதை ரசிகர்கள் புரிந்து கொண்டுவிட்டார்கள்.
அந்த விதத்தில் தற்போது 'லைகர்' படத்தை எப்படியாவது வசூலில் பிளாக் பஸ்டர் எனக் காட்ட வேண்டும் என படக்குழுவினர் கடுமையாக பிரமோஷன் செய்து வருகின்றனர். படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. படம் மிகவும் மோசம் என்றுதான் அவர்களும், விமர்சகர்களும் தெரிவிக்கிறார்கள். இருந்தாலும் படத்தில் இருக்கும் ஓரிரு நிறைவான விஷயங்களை வைத்து 'பெய்டு பிரமோஷன்' நடந்து வருகிறது என பாலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
இந்நிலையில் தங்களது படங்களுக்கு திரைப்படங்களை ரேட்டிங் செய்வதில் உலக அளவில் பிரபலமான 'ஐஎம்டிபி' வெப்சைட்டில் 'லைகர்' படத்திற்கு ரசிகர்கள் வெறும் 1.7 ரேட்டிங்கை மட்டுமே கொடுத்துள்ளார்கள். அந்த ரேட்டிங்கும் 5ற்கு அல்ல 10ற்கு. சமீப காலங்களில் மிக மோசமான ரேட்டிங்கை வாங்கியுள்ள படமாக 'லைகர்' இருக்கிறது. இந்த ரேட்டிங்கில் இதுவரை 17000 பேர் வரை கலந்து கொண்டுள்ளனர். அவர்களில் 76 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் 1 ரேட்டிங் மட்டுமே வழங்கியுள்ளனர்.
விஜய் தேவரகொண்டா ரசிகர்களும், படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் ஏனைய குழுவினர்களும் களத்திற்கு இறங்கி இந்த ரேட்டிங்கை உயர்த்தினால்தான் கொஞ்சமாவது ஏறுவதற்கு வாய்ப்புள்ளது.