நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

இயக்குனர் பாரதிராஜா கடந்த சில ஆண்டுகளாக நடிகராகவும் பயணித்து வருகிறார். கடந்தவாரம் தனுஷ் உடன் இவர் நடித்து வெளியான ‛திருச்சிற்றம்பலம்' படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. தொடர்ந்து இரண்டு, மூன்று படங்களில் நடித்து வரும் இவருக்கு சில தினங்களுக்கு முன் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து இவர் சென்னை, தி.நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பரிசோதனையில் இவருக்கு நீர்சத்து குறைபாடு மற்றும் மஞ்சள் காமாலை நோய் தாக்கம் இருந்ததாக தகவல்கள் வந்தன. இருப்பினும் அவரது உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் குடும்பத்தினரின் ஆலோசனைப்படி பாரதிராஜா வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதன்படி தி.நகரில் உள்ள மருத்துவமனையில் இருந்து சென்னை எம்ஜிஎம் மருத்துமனைக்கு டாக்டர் ராஜகோபால் மேற்பார்வையில் மேல் சிகிச்சைக்காக இன்று(ஆக.,25) மதியம் 12 மணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாரதிராஜாவிற்கு நெஞ்சில் சளி உள்ளது. நன்றாக பேசுகிறார். அடையாளம் காண்கிறார். அவர் விரைவில் குணமாகி வீடு திரும்புவார் என அவரை மருத்துவமனையில் சந்தித்த பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.