நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மகன் அலிகான் துக்லக் கதாநாயகனாக நடிக்க, மன்சூர் அலிகான் தயாரித்து, இயக்கியுள்ள படம் கடமான்பாறை. நாளை வெள்ளிக்கிழமை படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிட இருப்பதாக அறிவித்து விளம்பரமும் செய்து வந்தார். இந்த நிலையில் ஏற்கெனவே வெளியான திருச்சிற்றம்பலம் தியேட்டரை விட்டு வெளியேறவில்லை. இன்று வெளியாகும் லைகர் படமும், நாளை வெளியாகும் டைரி படமும் மீதமுள்ள தியேட்டர்களை ஆக்கிரமித்து கொண்டதால் மன்சூரலிகான் படத்திற்கு தியேட்டர் கிடைக்கவில்லை. விளம்பரத்திற்காக 10 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து விட்ட மன்சூரலிகான் இதனால் விரக்தியில் இருக்கிறார். இதனால் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்திருக்கிறார் மன்சூரலிகான்.