நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் 2014ம் ஆண்டு நடிகர் கார்த்தி, சமந்தாவை நடிப்பில் 'எண்ணி ஏழு நாள்' என்ற படத்தை தயாரிக்க திட்டமிட்டு பிவிபி கேபிட்டல் என்ற நிறுவனத்திடம் இருந்து ரூ.1 கோடியே 3 லட்சம் கடன் பெற்றிருந்தது. ஆனால் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் திட்டமிட்டபடி படத்தை தொடங்கவில்லை. வாங்கிய பணத்தையும் திருப்பித் தரவில்லை.
இதனால் பிவிபி நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அப்போது லிங்குசாமி கொடுத்த காசோலைகள் பணம் இன்றி திரும்பி வந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம், இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஸ் சந்திரபோஸ் ஆகியோருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்தோடு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. இதை தொடர்ந்து நேற்று லிங்குசாமி கோர்ட்டில் அபராத தொகையை செலுத்தினார். 6 மாத சிறை தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்.