ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க ஆரம்பமான படம் 'இந்தியன் 2'. இரண்டு வருடங்களுக்கு முன்பாக அப்படத்தின் படப்பிடிப்பில் நடைபெற்ற கிரேன் விபத்து, கொரோனா தாக்கம், தயாரிப்பு நிறுவனமான லைக்காவுக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் இடையிலான பிரச்சினை என இரண்டு வருடங்களாக படப்பிடிப்பு நின்று போயிருந்தது.
கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'விக்ரம்' படம் பெரும் வசூலைக் குவித்ததால் 'இந்தியன் 2' படத்தை மீண்டும் ஆரம்பித்து நடத்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின. 'விக்ரம்' படத்தை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின், 'இந்தியன் 2' படத்தின் தயாரிப்பில் ஆர்வம் காட்டினார். உடனடியாக வேலைகள் நடந்தன. அனைரையும் ஒருங்கிணைத்து படப்பிடிப்புக்கான வேலைகளை சில வாரங்களுக்கு முன்பே ஆரம்பித்தார்கள்.

இன்று முதல் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாக உள்ளது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் 'இந்தியன் 2'வில் இணைந்தது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. கடந்த இரண்டு வருடங்களில் இந்தப் படம் பற்றி வெளிவந்த அனைத்து கிசுகிசுக்களுக்கும் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.

இப்படத்தில் நடித்து வந்த நகைச்சுவை நடிகர் விவேக் மறைந்துவிட்டதால் அவருக்குப் பதிலாக அந்தக் கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் நடிக்க உள்ளார் எனத் தெரிகிறது. மற்றபடி காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா என இரண்டு வருடங்களுக்கு முந்தைய நட்சத்திரக் குழுவே மீண்டும் படத்தில் தொடர்கிறது. படத்தின் வெளியீடு எப்போது இருக்கும் என்பதுதான் ரசிகர்களின் அடுத்த கேள்வியாக இருக்கும்.

மீண்டும் பட பூஜை
சில ஆண்டுகளுக்கு முன் ‛இந்தியன் 2' படம் துவங்கிய போதே பூஜை போட்டு தான் ஆரம்பித்தனர். ஆனால் பின்னர் நிகழ்ந்த விபத்து உள்ளிட்ட பல பிரச்னைகளால் நின்ற படப்பிடிப்பு இன்று(ஆக., 24) முதல் மீண்டும் துவங்கி உள்ளது. அதனால் மீண்டும் ஒரு பட பூஜை நடத்தி படப்பிடிப்பை துவங்கி உள்ளனர். இதில் ஷங்கர், பாபி சிம்ஹா, லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் தயாரிப்பு நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.