நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் நானே வருவேன். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகிறது. இப்படத்தில் தனுஷின் இரண்டு போஸ்டர்களை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் எஸ்.தாணு. அதில் ஒரு போஸ்டரில், மீசை இல்லாமல் இளவட்டமாக தோன்றும் தனுஷ் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் காணப்படுகிறார். இன்னொரு போஸ்டரில் நடுத்தர கெட்டப்பில் தாடி மீசையுடன் கண்ணாடி அணிந்த நிலையில் தலையில் கேப் வைத்திருக்கிறார்.
அதோடு இந்த படத்தை விரைவில் தியேட்டரில் எதிர்பார்க்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். அதனால் நானே வருவேன் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இப்படத்தில் தனுஷ் உடன் இந்துஜா ரவிச்சந்திரன். எல்லி அவ்ரம், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளார்கள்.