நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சென்னை-28, சத்தம் போடாதே, அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் நிதின் சத்யா. இவர் கடந்த ஞாயிறு இரவு தான் மயிரிழையில் உயிர் தப்பிய அனுபவம் குறித்து தற்போது பகிர்ந்துகொண்டுள்ளார். சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென எதிர்பாராத விதமாக மழை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த நெரிசலில் நடிகர் நிதின் சத்யாவும் தனது காரில் பயணித்த போது ஆழ்வார்பேட்டையில் கமல் வீட்டருகே உள்ள சிக்னலில் மாட்டிக்கொண்டார்.
அந்த சமயத்தில் நிதின் சத்யாவுக்கு சற்று அருகிலிருந்த மரம் ஒன்று எதிர்பாராதவிதமாக முறிந்து விழுந்தது. அதேசமயம் நிதின் சத்யா அந்த விபத்திலிருந்து எதிர்பாராதவிதமாக மயிரிழையில் உயிர் தப்பினார். இந்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ள நிதின் சத்யா மழை நேரங்களில் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக மழை நேரத்தில் மரங்களின் கீழ் நிற்பதை தவிர்க்கும் விதமாக ஒரு விழிப்புணர்வு செய்தியையும் அவர் அதில் கொடுத்துள்ளார்.