நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பிரபல நடன இயக்குனர் பிருந்தா இயக்கிய படம் ஹேய் சினாமிகா. இதில் துல்கர் சல்மான், அதிதிராவ், காஜல் அகர்வால், நட்சத்திரா நாகேஷ், யோகிபாபு உள்ளபட பலர் நடித்திருந்தார்கள். கோவிந்த் வசந்தா இசை அமைத்திருந்தார், பிரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்திருந்தார். தமிழ், மலையாளத்தில் உருவாகி இருந்த இந்த படம் கடந்த மார்ச் மாதம் தியேட்டர்களில் வெளியானது. தற்போது வருகிற 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிறது.
துல்கர் சல்மானும், அதிதியும் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார்கள். பின்பு சில கருத்து வேறுபாடுகளால் அதிதி, துல்கர் சல்மானை பிரிய நினைக்கின்றார். இதன் காரணமாக உளவியல் மருத்துவரான காஜல் அகர்வாலை சந்திக்கின்றார் அதிதி. காஜல் அகர்வாலை தன் கணவர் துல்கர் சல்மானை காதலிக்குமாறு நடிக்கச் சொல்கின்றார். அதன் பின் இவர்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களே படத்தின் கதை.