மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தமிழ் சினிமாவில், வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி ரசிகர்களிடம் குறுகிய காலகட்டத்தில் வரவேற்பை பெற்றவர் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். குறிப்பாக விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா ஆகியோரின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர். ஒரு கட்டத்தில் ரஜினிகாந்தை வைத்து பேட்ட படத்தை இயக்கும் அளவுக்கு முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.
இன்னொரு பக்கம் ஸ்டோன் பெஞ்ச் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி புதிய இயக்குனர்கள் மற்றும் நட்சத்திரங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறார். மேலும் நான்கைந்து குறும்படங்களை கொண்ட ஆன்தாலாஜி படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் முதன்முதலாக 'அட்டென்ஷன் ப்ளீஸ்' என்கிற திரைப்படத்தை வெளியிடுவதன் மூலம் மலையாள திரையுலகிலும் காலடி எடுத்து வைத்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ். ஜிதின் இசாக் தாமஸ் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தை கார்த்திகேயன் சந்தானம் என்பவர் தயாரித்துள்ளார். தனது ஸ்டோன் பென்ச் நிறுவனம் மூலம் இந்தப்படத்தை வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியிட இருப்பதாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.